ஒகேனக்கல் மலைபாதையில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து - 20 பேர் காயம் - Seithipunal
Seithipunal


ஒகேனக்கல் மலைப்பகுதியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் மலை பகுதியில் கணவாய் ஆஞ்சநேயர் கோவில் அருகே இன்று காலை சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைப்பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து பலத்த காயமடைந்த 20 பேரை சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இதைத்தொடர்ந்து சாலையில் கவிழ்ந்த பேருந்தை அப்புறப்படுத்திய போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 injured in Tourist bus overturns on hogenakkal hill


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->