நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடியால் பரபரப்பு..பீதியில் மக்கள்..!! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டமானது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலைப் பகுதியில் யானை, காட்டெருமை, மான், சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் அவ்வப்போது இரை தேடி மலையை விட்டு கீழே வருவதுண்டு.

அதிலும் குறிப்பாக மலையடிவாரத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, சிவந்திபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு அடிக்கடி வன விலங்குகள் வருவது நிகழ்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாபநாசம் அருகே உள்ள சில பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தெரிய வந்ததையடுத்து கூண்டுகள் வைத்து 4 சிறுத்தைகள் பிடிபட்டன.

இந்நிலையில் விடுமுறை நாளான இன்று மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்திருந்தனர். அப்போது இன்று பிற்பகல் நேரத்தில் மணிமுத்தாறு பகுதியின் பிரதான சாலையில் ஒரு கரடி சாவகாசமாக சாலையை கடந்து சென்றுள்ளது.

இதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் பயந்து அலறி ஓடியுள்ளனர். அதைப் பார்த்து பயந்த கரடியும் ஓடிச்சென்று அங்குள்ள ஒரு மரத்தின் கிளையில் ஏறியது. இதனால் அச்சமடைந்த சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் தொடர்ந்து 10 மணி நேரத்திற்கும் மேலாக கரடி அந்த மரத்திலேயே உள்ளதால் வனத்துறையினர் என்ன செய்வது என்ற குழப்பத்தில் உள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் பீதியடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Bear roaming Near Nellai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->