கத்திக்குத்து பட்ட மருத்துவரை நேரில் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று விக்னேஷ் என்பவர் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார். இதில், மருத்துவர் பாலாஜியின் கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மயக்க நிலையில் உள்ளார். மருத்துவரைத் தாக்கிய விவகாரத்தில் விக்னேஷ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே அரசியல் கட்சியினர் மருத்துவரை நேரில் சந்தித்து ஆறுதல் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கத்தி குத்தால் தாக்கப்பட்டு கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

அதாவது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் கிண்டி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ex ministers visit dr balaji in gundy hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->