தஞ்சாவூர்: ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றியது அமமுக.. !
AMMK victory by the Orattanadu municipality
ஒரத்தநாடு பேருராட்சியின் பெரும்பான்மை வார்டுகளில் அமமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் ஒட்டுமொத்தமாக 12,838 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. வாக்குஎண்ணிக்கை காலை எட்டு மணி முதல் விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேருராட்சியின் பெரும்பான்மையான வார்டுகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அமமுக சார்பில் போட்டியிட்ட பானுமதி ( 1 வார்ட்) , உமாதேவி (2 வார்ட்), சித்ரா (4 வார்ட்), உமா (6 வார்ட்), மா. சேகர் (வார்ட் 6) , மகேந்திரன் ( 10 வார்ட் ), திருமங்கை ( 11 வார்ட்), மலர்கொடி (12 வார்ட்), விஜயலெட்சுமி ( 13 வார்ட்) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆளும் கட்சி வேட்பாளர்களை வீழ்த்தி ஒரத்தநாடு பேருராட்சியை அமமுக கைப்பற்றியுள்ளது குறிப்பிடதக்கது.
English Summary
AMMK victory by the Orattanadu municipality