சென்னை : போலி நகையை அடகு வைத்து மோசடி.! கார் ஓட்டுநர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னையில் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் நரேஷ் என்பவர் வைத்துள்ள அடகு கடைக்கு கார் ஓட்டுநர் மணிகண்டன் (36) என்பவர் கடந்த 24ஆம் தேதி சுமார் 25 கிராம் நகை அடகு வைக்க வந்துள்ளார். அப்பொழுது கடையில் தந்தை சஜ்ஜன் மட்டும் இருந்ததால், தாயை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும், ஆபரேஷன் செய்வதற்கு உடனடியாக பணம் தேவைப்படுகிறது என்று கூறி ரூபாய் 92 ஆயிரம் வாங்கிச் சென்றுள்ளார்.

இதையடுத்து நரேஷ் கடைக்கு வந்து நகையை பரிசோதனை செய்ததில், அது போலி நகை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில், இதுபோன்று மற்றொரு கடையில் போலி நகைகள் அடகு வைத்து ரூபாய் 92 ஆயிரம் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மணிகண்டனை சிறையில் அடைத்த போலீசார், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arrested car driver who cheated by pawning fake jewelry in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->