கலப்பட டாஸ்மாக் மது! செங்கல்பட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் உட்பட 4 பேர் பலி! - Seithipunal
Seithipunal



செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அருகே பேரம்பாக்கத்தில் மது அருந்திய வெண்ணியப்பன் - சந்திரா தம்பதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை அருந்தியதால் தம்பதிகள் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகிய நிலையில், மேலும் அதே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலியாகியுள்ளனர். 

இந்நிலையில், கலப்பட மது குடித்து நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் மூன்று பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், உதவி காவல் ஆய்வாளர்கள் மோகனசுந்தரம், ரமேஷ் ஆகியோர் இடைநீக்கம் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே மதுராந்தகத்தில் கலப்படம் மது குடித்த  மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

அவர்கள் அருந்தியது மதுவா? இல்லை கள்ளசாராயமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்திய 6 பேர் பலியாகிய சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேலும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chengalpattu perampakkam mystery death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->