சென்னை தினம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை தினம் கொண்டாட்டத்தையொட்டி பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
 
இதன் பின்னர் பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது, 

"ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய திருவிழா நாட்களில் சிறப்பு அங்காடிகள் அமைக்கப்பட்டு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த வகையில் சென்னை தினம் சென்னை மாநகருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த‌‌ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சர் உத்தரவின் பேரில், சென்னையில் உள்ள 16 நீர்நிலைகளில் கலந்துள்ள கழிவுநீரை அகற்றி தூய்மைப்படுத்தி அவற்றை மீண்டும் நீர்நிலைகளாக மாற்றும் பணிகள்  நடைபெற்று வருகிறது. மேலும், சென்னையில் மட்டும் சுமார் 1,055 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தமிழக முதலமைச்சர், சென்னை மேயராக இருந்தபோது தான் சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. பிற மாநிலங்கள் வியக்கும் வகையில் சென்னையில் அனைத்து சேவை துறைகளையும் ஒருங்கிணைத்து சாலைகள், தெருவிளக்குகள் மற்றும் குடிநீர் வசதிகள்‌‌ என பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன". என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Day 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->