சென்னை வாசிகளே கவனம் | இந்த தீபாவளிக்கு இதையெல்லாம் தவிர்த்துவிடுங்கள் - சென்னை மாநகராட்சி!
Chennai Diwali 2022 Instruction
சென்னை மக்கள் இந்த தீபாவளியை குறைந்த ஒலியுடன் கூடிய பசுமைப் பட்டாசுகளை பயன்படுத்தி கொண்டாட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசால் தீபாவளி பண்டிகை தினத்தன்று கடந்த ஆண்டைப் போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணிமுதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணி காக்க பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் கூடிய பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள நலச் சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்.
பட்டாசு குப்பைகளை மற்ற எந்தக் குப்பைகளுடனும் கலக்காமல் தினந்தோறும் வகைப்படுத்திய குப்பையை பெற வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் தனியாக ஒப்படைக்க வேண்டும்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் பட்டாசு குப்பைகள் தனியாக சேகரிக்கப்பட்டு கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தும் செயலாக்க நிலையத்திற்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தவிர்க்க வேண்டியவை:
* பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் கூடிய பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
* அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளைத் தவிர்க்க வேண்டும்.
* மருத்துவமனைகள், வழிகாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பாட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
English Summary
Chennai Diwali 2022 Instruction