சில சுயநலவாதிகளால் பட்டினம்பாக்கம் மீனவர்கள் போராட்டம் - சென்னை உயர்நீதியாமன்றம் பகீர் குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரை உள்ள லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றி, பதில் மனு தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், சற்று முன்பு சென்னை மாநகராட்சி ஆணையர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவரின் அந்த மனுவில், கடந்த 12ஆம் தேதி முதல் இந்த லோக் சாலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

75 மீன் கடைகள், 15 குடிசைகள், 21 பெட்டி கடைகள் அகற்றப்பட்டு உள்ளன. மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், ஆக்கிரமிப்பு பணி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத சாலையாக இந்த சாலை செயல்பட்டு வருகிறது. அதே சமயத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சாலையின் மேற்குப் பகுதியில் உள்ள மீனவர்களின் குடியிருப்பு பகுதி உள்ளேயே கடைகள் அமைத்து தர அனுமதி அளிக்க வேண்டும்" என்று மாநகராட்சி ஆணையர் கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், மனுவாக தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தினார். மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது, மெரினா லூப் சாலையில் உள்ள சில சுயநலவாதிகளின் தூண்டுதலின் பெயரில் மீனவர்களும், மீனவர் அமைப்புகளும் இது போன்ற போராட்டத்தை நடத்தி வருவதாகவும், இது போன்ற போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்தும் படி நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், இதுபோன்ற போராட்டங்களால் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC Condemn pattinampakkam protest


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->