#சென்னை | குடியிருப்பு வாசிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் - அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
Chennai Housing Board Work Minister announce
சீரமைப்பு பணியின் போது வாடகைக்கு வெளியே தங்குவோருக்கு ரூ.24,000 வழங்கப்படும் என்று, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சீரமைப்பு பணியின் போது, மாற்று இடத்தில் அல்லது வேறு இடத்தில் தங்கும் குடியிருப்பு வாசிகளுக்கு ரூ.24,000 வழங்கப்படும் என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்தாவது, "குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சிதிலமடைந்த கட்டங்களை இடித்து கட்டித்தர 18 மாதம் ஆகும்.
எனவே, குடியிருப்பு வாசிகள் வெளியே தங்கவேண்டிய சூழல் உருவாகி உள்ளது. அப்போது வாடகைக்கு வெளியே தங்குவோருக்கு ரூ.24,000 வழங்கப்படும்.
மேலும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் இனி 420 சதுர அடி அளவில் வீடு கட்டித்தரப்படும்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேலும் கால்பந்து வீராங்கனை மரணத்திற்கு காரணமான மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என்று, வெளியான அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மருத்துவர்களுக்கு பாதிப்பு உள்ளது போலவே, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதிப்பு உள்ளது. ஆகையால் அரசு மருத்துவர்கள் போராட்டத்தை நடத்தாமல் இருக்க பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
English Summary
Chennai Housing Board Work Minister announce