தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி..! - Seithipunal
Seithipunal


தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18ம் தேதி உடல்நலம் குறைவால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மார்பு சளி, இருமல் காரணமாக செயற்கை சுவாசகருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் உடல்நலம் குறித்து பல வதந்திகள் பரவின. அதற்கு தேமுதிக பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் மறுப்பு தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு பிறகு அவர் உடல் நலம் தேறி வீடு திரும்பிய பிறகு தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது அந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டதோடு அக்கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொண்டதில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தகவல் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona positive to tmtk leader vijayakant


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->