அது மட்டும் நடந்து இருந்தா? பலி எண்ணிக்கை 1000 கணக்கில் இருக்கும்! தடுத்து நிறுத்திய தமிழக போலீஸ்! அதிர்ச்சி அறிக்கை!
DGP Statement about Methanol death case
தனிப்படை போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், விஷச்சாராயத்தால் பலி எண்ணிக்கை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாகி இருக்கும் என்று, டிஜிபி சைலேந்திரபாபு சற்று முன்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சென்னை சேர்ந்த கெமிக்கல் கம்பெனியின் அதிபர் இளையநம்பி என்பவர், கடந்த 2018 ஆம் ஆண்டு 200 லிட்டர் கொண்ட ஆறு பேரல்களில் 1200 லிட்டர் விஷச்சாராயத்தை பாண்டிச்சேரியை சேர்ந்த பரகத்துல்லா மற்றும் ஏழுமலை என்பவருக்கு 66 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
இவர்களிடமிருந்து 400 லிட்டர் விஷச்சாராயத்தை வாங்கி அதை இவர் விற்பனை செய்து உள்ளார். இந்த சாராயம் தான் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 21 பேரின் உயிரை பலிவாங்கியுள்ளது.
இவரை கைது செய்துள்ள இவரை இவரை கைது செய்த 48 மணிநேரத்தில், 1192 லிட்டர் லிட்டர் விஷ சாராயத்தை, பல்வேறு நபர்களிடமிருந்து போலீசார் விரைந்து கைப்பற்றியுள்ளனர்.
இந்த விஷச்சாராயம் பறிமுதல் செய்யப்படாமல் இருந்தால், இது பல கிராமங்களுக்கு சென்று, பெரும் அளவில் உயிர் சேதத்தை, அதாவது ஆயிரக்கணக்கில் ஏற்படுத்தி இருக்கும் என்று டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 1200 லிட்டர் விஷச்சாராயத்தை வாங்கியவர்கள் 5 லிட்டர் மரக்கணத்திலும், 3 லிட்டர் சித்தாமூரிலும் விஜி விற்பனை செய்து உள்ளார்.
உயிர் இழப்பை ஏற்படுத்திய கள்ளச்சாராயம், கிராமப் பகுதிகளில் காய்ச்சி வடிக்கப்பட்ட கள்ளச்சாராயம் அல்ல, தொழிற்சாலைகளில் தயார் செய்யப்படும் எரிச் சாராயமும் அல்ல. இது தொழிற்சாலைகளில் தின்னர் போன்ற பொருட்களைத் தயார் செய்ய மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற விஷச்சாராயம் என்பதாலும், இது மனிதர்களின் உயிர்களை பறிக்கும் தன்மையுள்ளது.
எனவே, ஜெய சக்தி கெமிக்கல் பிரைவேட் லிமிடேட் கம்பெனியினுடைய அதிபர் இளையநம்பி, பரகத்துல்லா (எ) ராஜா, ஏழுமலை, விளாம்பூர் விஜி மற்றும் 13 பேர் மீது மரக்காணம் காவல் நிலையம் மற்றும் சித்தாமூர் காவல் நிலையங்களிலுள்ள வழக்குகளை கொலை வழக்காக (302 IPC) மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
English Summary
DGP Statement about Methanol death case