விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டுக்கு சென்றபோது நேர்ந்த விபரீதம்: தொண்டர்கள் மருத்துவமனையில் அனுமதி!
Dharmapuri private bus accident
தர்மபுரி, கடத்தூர் அருகே உள்ள பத்திரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருச்சியில் நடைபெறும் வெல்லும் சனநாயகம் மாநாட்டுக்கு இன்று காலை ஒரு தனியார் பேருந்தில் கட்சியை சேர்ந்த 60 பேர் சென்றனர்.
கட்சி பேருந்து பொம்படி-தர்மபுரி சாலையில் உள்ள ரயில்வே பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதியது.
இதில் பேருந்தின் முன் பக்கம் இருந்த கண்ணாடி உடைந்து நொறுங்கியதில் பேருந்தில் பயணித்த 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இருப்பினும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Dharmapuri private bus accident