வேலூர் அருகே டபுள் டக்கர் ரெயிலில் திடீர் புகை! அச்சத்தில் அலறிய பயணிகள்! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் டபுள் டக்கர் ரெயில் பிரேக் பழுதாகி புகை வந்ததால் பயணிகள் பரபரப்பு:

சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் டபுள் டக்கர் ரெயில் இன்று காலை புறப்பட்டு, வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம்-குடியாத்தம் இடையே வேகமாக சென்று கொண்டிருந்தது. 

அப்போது திடீரென ரெயிலில் சி 6 ஏ.சி. பெட்டியின் சக்கரத்தில் புகை வந்ததில், அது சி7 பெட்டிக்கு பரவ தொடங்கியது. இதனால் அச்சமடைந்த பயணிகள் ரெயில் என்ஜின் ஓட்டுனருக்கு தகவல் தெரிவித்தனர். 

உடனடியாக என்ஜின் ஓட்டுநர் ரெயிலை நிறுத்தி, இது குறித்து குடியாத்தம் ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் பார்த்தபோது, பிரேக் பழுதானதால் சக்கரத்தில் இருந்து புகை வந்தது தெரிந்தது. பின்னர் ஊழியர்கள் அதனை சரி செய்தனர். 

இதனால் டபுள் டக்கர் ரெயில் 15 நிமிடம் கால தாமதமாக பெங்களூரை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் பயணிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

double decker train sudden smoke passengers panic


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->