புதுச்சேரி வேட்பாளரை ஆதரித்து இபிஎஸ் பிரச்சாரம்.!
eps election campaighn in puthuchery
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுச்சேரியில் வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் பேசியதாவது:-
"புதுச்சேரியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது. புதுவைக்கு தனி மாநில அந்தஸ்தை நாங்கள் பெற்றுத் தருவோம். மாநில அந்தஸ்து பெற்றால் தான், மாநில நிதி பகிர்வு கிடைக்கும். புதுவை முதல்வரால் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. துணைநிலை ஆளுநர் தான் முடிவெடுக்க முடியும். புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அனுமதி கோப்பு கூட கிடப்பில் இருக்கிறது. மக்கள் பிரதிநிதிகளுக்கு என்ன அதிகாரம் இங்கு உள்ளது
புதுவையில் மாறி மாறி காங்கிரஸும், பாஜகவும் ஆட்சி அமைக்கின்றன. ஆனால் புதுவைக்கு தேவையான நிதியை அவர்கள் தருவதில்லை. அதிமுக இங்கு வென்றால், சிங்கப்பூர் போல இந்தத் தொகுதியை மாற்றி அமைப்போம். புதுவையை அழகாக நகரமாக உருவாக்க முடியும்
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் கூட, அதிக வரி போட்டு பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தி விற்கிறார்கள். அதனால் விலைவாசி உயர்ந்துள்ளது. அதிமுக வென்றால், விலைவாசியை குறைப்போம். இங்கு கூட்டு நூற்பாலை திறக்கப்படும்
புதுவையில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்கள். பெண்களுக்கு, சிறுமிகளுக்கு பாதுகாப்பே இல்லை. இதை எல்லாம் சரி செய்ய, 43 ஆண்டுகளுக்கு பிறகு 2026ல் இங்கு அதிமுக ஆட்சி அமைந்தே தீர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
eps election campaighn in puthuchery