கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம்.. வழக்கு பதிவு செய்ய உத்தரவு - மதுரை உயர்நீதிமன்ற கிளை.! - Seithipunal
Seithipunal


கோயில் திருவிழாக்களின் போது ஆபாச நடனம் ஏற்பாடு செய்தால் பெண் வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அரசகுளத்தை சேர்ந்த கதிரேசன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் அரசகுளத்தில் உள்ள கருப்பன்சாமி கோவில் திருவிழாவின் போது நீதிமன்ற உத்தரவை மீறி ஆபாச நடனம் நடைபெற்றதாகவும் இந்த விழாவின் ஏற்பாட்டாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி கோவில் திருவிழாவின் போது ஆபாச நடனம் நடைபெற்றது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை நீதிபதி முன்பு சமர்ப்பித்தார்.

 இதனை பார்த்த நீதிபதி கோவில் திருவிழாவில் இவ்வளவு மோசமாக ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதித்தது யார்? என்று கேள்வி எழுப்பினார். மேலும்,  கோவில் என்பது வழிபாட்டுக்காக பொதுமக்கள் வரக்கூடிய இடமாக உள்ள நிலையில் அங்கு இவ்வளவு ஆபாசமாக நடமாடும் போது காவல்துறை என்ன செய்து என்று கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து அரசு சார்பில் ஆபாச நடனம் ஆடியது குறித்து 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று தெரிவித்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீதிபதி இதனை சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் விழா ஏற்பாட்டாளர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

 மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து அதனை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Glamour dance in festival womens harassment act madurai highcourt order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->