மருத்துவர் மீது கத்தி குத்து - மருத்துவர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு..! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் அரசு மருத்துவமனையில், புற்றுநோய் துறையில் பாலாஜி ஜெகன்நாதன் என்பவர் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று விக்னேஷ் என்பவர் குற்றம்சாட்டி வந்துள்ளார். 

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விக்னேஷ் உட்பட 4 பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மருத்துவர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவகல்லூரிகளில் அவசரகால சிகிச்சை, மற்றும் உயிர் பாதுகாப்பு சிகிச்சை தவிர்த்து அனைத்து துறை அரசு மருத்துவர்களும், காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government doctors association announce strike for gundy doctor attack


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->