H3N2 வைரஸ் காய்ச்சலை குணப்படுத்த இதை செய்தாலே போதும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!
How to protect H3N2 virus fever minister ma subramanian
தமிழகத்தில் சமீப காலமாக பருவநிலை மாற்றங்களால் புதிய வகை வைரஸ் நோய்கள் பரவி வருகின்றன. அதன் காரணமாக மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுவர்கள் முதியவர்கள் என இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் பாதித்து வருகிறது.
சாதாரண சளி இருமல் காய்ச்சலால் மாத்திரை மருந்து எடுத்துக் கொண்டால் ஒரு வாரத்தில் சரியாகிவிடும். ஆனால் இந்த வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்படுவோர் தொண்டை வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், H3N2 வைரஸ் காய்ச்சல் வந்தால் 3 நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுத்தால் போதுமானது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் தனிநபர் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் காய்ச்சல் பாதிப்பு வராமல் தடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாளை தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதில் சென்னையில் மட்டும் 200 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
English Summary
How to protect H3N2 virus fever minister ma subramanian