சுற்றுலா பயணிகளே ரெடியா..ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் 110 டிகிரி தாண்டி வெப்ப அலை வீசுகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதற்கு பூமி வெப்பமயமாதலும் காலநிலை மாற்றமே காரணம் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கோடை விடுமுறையை முன்னிட்டு வெயிலின் தாக்கத்தை தாங்காமலும் சுற்றுலா பயணிகள் குளிர் பிரதேசங்களுக்கு செல்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நேற்று ஊட்டியில் மலர்கண்காட்சி தொடங்கியது. ஊட்டிக்கு செல்ல இ பஸ் கட்டணம் என்று தமிழக அரசு அறிவித்தது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் ஒரு சுற்றுலாத்தலமாக காணப்படுகிறது. கோடை காலங்களில் ஒகேனக்கலுக்கு பல லட்சம் மக்கள் வந்து செல்வது வழக்கம்.

அந்த வகையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தினால் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 200 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 1800 கன அடியாக அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இது அமைந்துள்ளது. ஒகேனக்கலில் நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Increase in water flow in hogenakkal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->