திமுக -வின் சுய ரூபத்தை இனிமேல் காண்பீர்கள்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.! - Seithipunal
Seithipunal


பிற்பகலில் தான் திமுக -வினர் தங்களின் சுய ரூபத்தை காட்டுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சித் தேர்தகுக்கான வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அமைதியாக நடைபெறும் வாக்குப்பதிவு:

தற்போது வரை எந்த வித அசம்பாவிதமும் நடைபெறாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் ஓட்டளித்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்:

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

வெளியூர்களில் இருஃது இறக்குமதி செய்யப்பட்டுள்ள குண்டர்கள், ரவுடிகள் அனைவரும் வாக்குபதிவு நடைபெறும் பகுதிகளில் இருந்து முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில், மாநில தேர்தல் ஆணையத்தில் அதிமுக சட்ட ஆலோசனைக் குழு சார்பில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், பாபு முருகவேல் உள்ளிட்டோருடன் சென்று புகார் மனு அளித்ததாக தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் நடவடிக்கை:

மனுவை பெற்று கொண்ட தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது என்றும், அதனடிப்படையில் தற்போது வரை, தேர்தல் அமைதியாக நடைபெற்று வரும் சூழல் இருப்பதாக தெரிவித்தார். மாலை வாக்குப்பதிவு முடிவடையும் நேரம் வரை, இதே நிலை நீடிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையோடு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

பரிசு பொருட்கள் விநியோகம்:

ஆளும் கட்சி சார்பில் ஒவ்வொரு வீட்டிற்கும், ஒரு வீட்டில் 5 பேர் இருந்தாலும், அனைவருக்கும் ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும், ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.500, ரூ.1,000, பணம் விளையாடுகிறது என்றும் தெரிவித்தார். சென்னையில் பல இடங்களில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை காவல்துறை கண்டுகொள்ளவே இல்லை என்றும் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

திமுக -வினரின் சுய ரூபம்:

மேலும் தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, திமுகவைப் பொறுத்தவரை இனிமேல்தான் அவர்களின் கச்சேரியை ஆரம்பிக்கப்போவதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் அதனால் பிற்பகலில் அந்த கச்சேரியை அனைவரும் காண்பீர்கள் என நினைப்பதாகவும், கச்சேரியை ஆரம்பிப்பதற்கான முஸ்தீபுகள், முன்னேற்பாடுகள் எல்லாம் செய்துகொண்டிரு்பபாதக தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar Slams DMK


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->