தாமரை சின்னம் விவகாரம்: தீர்ப்பை தள்ளி வைத்த நீதிமன்றம்.!
Lotus symbol case court postponed verdict
தேசிய மலரான தாமரையை பா.ஜ.கவுக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தாமரையை ஓர் அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவு படுத்துவது என டி. ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், பா.ஜ.கவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்ய கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்ததும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் டி. ரமேஷ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.
English Summary
Lotus symbol case court postponed verdict