அதிர்ச்சி.! கோவையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று, அதிகரிக்க துவங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக கேரள மாநிலத்தில் நாள்தோறும் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. 

இதேபோல் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோன தொற்று அதிகரித்து வருகிறது. ஜேஎன்1.1 என்ற திரிபு கொரோனா தமிழகத்தில் நேற்று 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கொரோனா தொற்று அறிகுறிகளுடன் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒருவரின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் பரிசோதனைக்காக அனுப்பியிருந்தனர். அந்த 
பரிசோதனையில் அவருக்கு ஒமிக்ரான் ஜேஎன்1.1 என்ற திரிபு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டிலேயே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், பாதிக்கப்பட்டவரின் உடல் நலம் சீராக உள்ளது என்றும், அவர் வெளிமாநிலங்களுக்கு எங்கும் செல்லவில்லை என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், அவரது குடும்பத்தினர் மற்றும் அவர் வசித்து வரும் பகுதியில் உள்ள மக்களுக்கும் பரிசோதனைகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man affected corona virus in coimbatore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->