கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்த பொழுது விபரீதம்.! பணிப்பெண் பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


பவுலினா என்பவர் சென்னை மணலி பகுதியில் மாவு அரைக்கும் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே பகுதியில் அண்ணா தெருவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். நேற்று அவர் வழக்கம்போல கடையில் மாவு அரைத்து கொண்டிருந்தார். 

அப்பொழுது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். அவருடன் பணி செய்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்பொழுது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து மாவு கடை உரிமையாளரான விமலா இறந்து போனவரின் குடும்பத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். காவல்துறையினர் ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உடலை கொண்டு சென்றனர். இத்தகைய சூழலில் பவுலினாவின் குடும்பத்தினர் அவர் மின்சாரம் தாக்கி இறந்து விட்டார் என்று புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகுதான் உறுதியாக எதையும் கூற முடியும் என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manali women death while powder


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->