ஓரின சேர்க்கைக்கு வராததால் வாலிபரை கொலை செய்த நபர் கைது.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது பாசில். இவர் தனது மனைவி பண்ணாரியுடன் சேர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள துடியலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பிளாட் பாரத்தில் தங்கி பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில் உள்ளிட்ட குப்பைகளை சேகரிக்கும் தொழில் செய்து வந்தார். 

இவர்கள் இருவரும் தினமும் அந்தப்பகுதியில் உள்ள குப்பைகளை சேகரித்து, அதனை விற்பனை செய்து அதில் வரும் பணத்தை கொண்டு தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வசித்திருந்த அதே பிளாட் பாரமில் கேரளாவை சேர்ந்த ரமேஷ் என்பவரும் வசித்து வந்துள்ளார். இவருக்கும் முகமது பாசிலுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, நண்பர்களாக பழகி வந்தனர்.

அதன் பின்னர் இருவரும் ஒன்றாக வேலை செய்ய ஆரம்பித்தனர். ஏற்கனவே அவர்களுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தினமும் பணி முடிந்த பிறகு சேர்ந்து மது குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். 

அதுமட்டுமல்லாமல், இருவரும் ஒரின சேர்க்கையிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், இருவரும் நேற்று வழக்கம் போல் தங்கள் வேலையை முடித்து விட்டு ஒன்றாக அமர்ந்து மது குடித்து பின்னர் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், முகமது பாசில் மீது பாறாங்கல்லை எடுத்து போட்டுள்ளார். இதில், பலத்த காயம் அடைந்து முகமது பாசில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக பொலிசாருக்குத் தகவல் அளித்தனர்.

அதன் படி, போலீசார் முகமது பாசில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் ரமேஷை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near coimbatore man arrested for kill young man for Homosexuality


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->