திண்டுக்கல் || குடகனாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தனித்தீவாக மாறிய கிராமம்.! - Seithipunal
Seithipunal


தற்போது, தமிழகத்தில், பருவ மழைத் தொடங்கி தீவிரமடைந்துள்ளதால், ஆறு, ஏரி என்று அனைத்திலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கிறது. இதனால், கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. 

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு அருகே ஆத்துப்பட்டி கிராமத்தில் வாழ்ந்து வரும் ஏராளமான குடும்பத்தினர்கள் அங்குள்ள குடகனாற்றை கடந்துதான் ஊருக்குள் செல்ல வேண்டும். மேலும் பல்வேறு தேவைக்களுக்காக திண்டுக்கல் மற்றும் வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். 

இதனால், ஆற்றை கடந்து செல்வதற்கு பொதுமக்கள் மிகவும் சிரமபடுகின்றனர். இந்நிலையில், தாடிக்கொம்பு பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் இந்த பகுதியில் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறதனால், இதையடுத்து, "ஆற்றை கடக்கக்கூடாது" என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் மாற்று பாதையில் செல்ல வேண்டும் என்றால், அதற்கு தனியார் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்கள் வழியாக செல்வதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்துப்பட்டி கிராமம் தனித்தீவாக மாறியது. 

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்ததாவது, "ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதனால், கிராம மக்கள் அவசரமாக வெளிப்பகுதிகளுக்கு செல்ல முடியாமல் அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. 

இதற்கு முன்னதாக மூன்று முறை மேம்பாலம் கட்டக்கோரி சாலை மறியல், ரேசன் கார்டு ஒப்படைப்பு உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டோம். ஆனால் அந்தப் போராட்டத்திற்கு தீர்வு காணப்படாததால் பெரும்பலான குடும்பத்தினர்கள் இந்த கிராமத்தை விட்டு வெளியில் சென்றனர். சில குடும்பத்தினர் மட்டும் கிராமத்தில், விவசாய பணிகளில் ஈடுபட்டு வருவதால் இங்கையே தங்கி உள்ளனர்" என்று தெரிவித்துள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near dindukal kudagan river floods peoples worry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->