புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.!
new low pressure forming arabic sea
புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.!
தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
அதன்படி இன்று சென்னை, நீலகிரி, கோவை, ஈரோடு, மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட இருபது மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
new low pressure forming arabic sea