உலகில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் தாயாகி  சேவை வாய்ப்பு செவிலியர்களுக்கு வாழ்த்துக்கள்! - Seithipunal
Seithipunal


பா.ம.க.  நிறுவனர் மருத்துவர்  இராமதாஸ், மருத்துவப் பணியாற்றும் மனித தேவதைகளுக்கு செவிலியர் நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் வாழ்த்துச் செய்தியில், "உலகில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் தாயாகி  சேவை வாய்ப்பு செவிலியர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். 

மருத்துவர்களுடன் இணைந்து நோயர்களைக் காக்கும் மனித தேவதைகள் அவர்கள். மற்றவர்களின் நலனுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் அனைத்து செவிலியர்களுக்கும்  உலக  செவிலியர் நாளில் எனது  நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்"

அதிமுக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "பொதுநலம் ஒன்றையே தங்களது குறிக்கோளாகக் கொண்டு தன்னலமின்றி மருத்துவ சேவையாற்றி உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து வரும் செவிலியர்கள் அனைவருக்கும் இந்த செவிலியர் தினத்தில் எனது வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்."


பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் செவிலியர் நாள் வாழ்த்துச் செய்தி : உயிர்காக்கும் உன்னத பணி செய்யும் செவிலியர்கள் போற்றப்பட வேண்டும்.

"உலகின் மிக உன்னதமான பணி உயிர் காக்கும் பணி தான். ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்களும், செவிலியர்களும் தான். இரவும் பகலும் பார்க்காமல் நோயர்களின் நலனைக்காப்பதில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் அனைத்து நைட்டிங்கேல்களுக்கும் எனது செவிலியர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nurses day Wish 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->