ரம்ஜான் பண்டிகையின் போது மசூதியில் மயங்கி விழுந்து முதியவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ரம்ஜான் பண்டிகையின் போது மசூதியில் மயங்கி விழுந்து முதியவர் உயிரிழப்பு.!

சென்னையில் உள்ள குரோம்பேட்டையில் மசூதி ஒன்றில் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு  சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதன் பின்னர் மசூதியில் ரம்ஜான் பண்டிகை நாட்களில் பல்வேறு பணிகளை செய்தவர்களுக்கு மசூதியின் ரம்ஜான் கமிட்டி சார்பில் பணம் கொடுக்கப்பட்டது. 

அந்தவகையில், அஸ்தினாபுரத்தில் உள்ள திருமலை நகர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் என்பவருக்கு ரூ.1,200 பணம் கொடுத்துள்ளனர். இந்த பணம் கொடுப்பது தொடர்பாக முகமது ரியாசுக்கும், கமிட்டி செயலாளர் பாஷா என்பவர்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இருவருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். அதன் பின்னர் மசூதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே முகமது ரியாஸ் அமர்ந்திருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

அதுமட்டுமல்லாமல், முகமது ரியாசின் நெற்றியில் காயம் இருந்ததால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் பயாஸ் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்ததில் நெற்றியில் காயம் ஏற்பட்டது. இந்தக் காயத்தினால் அவர் இறந்தாரா? என்பது பிரேத பரிசோதனை முடிவில் தான் தெரியவரும் என்றுத் தெரிவித்தனர். 

ரம்ஜான் பண்டிகையின் போது மசூதியில் நடைபெற்ற இந்த சம்பவம் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்த முகமது ரியாஸ் இருதய நோய்க்கு ஆஞ்சியோ சிகிச்சை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old man died in krompet masque


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->