தேவர் குறித்து அவதூறு.. சவுக்கு சங்கர் மீது 8வது வழக்கு பதிவு.! - Seithipunal
Seithipunal


ரெட் பெலிக்ஸி யூடியூப் சேனலில் முத்துராமலிங்க தேவர் குறித்து சவுக்கு சங்கர் அவதூறு கருத்து தெரிவித்ததாக அவர் மீது வழக்கறிஞர் முத்து என்பவர் அளித்த புகாரில் கோவை மாநகர பந்தய சாலை காவல் நிலையத்தில், சவுக்கு சங்கர், பெலிக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மீது இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் கோவை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையத்தில் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில் தற்போது கோவை மாநகர் போலீசார் 8வது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கு தொடர்பாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் தற்போது திருச்சி அழைத்து செல்லப்படுகிறார். 

ஏற்கனவே ரெட் ப்லிக்ஸ் தலைமை ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் கோவை சைபர் காயின் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One more Case filed against Savukku Shankar Felix


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->