மூன்று போக்குவரத்திற்கு ஒரே டிக்கெட் - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினமும் பணிக்கு செல்லும் மக்கள் மாநகரப் பேருந்துகள், மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் சிலர் வீடுகளில் இருந்து அலுவலகத்திற்கு செல்வதற்குப் பேருந்து மற்றும் ரயில், மெட்ரோ உள்ளிட்ட மூன்று போக்குவரத்தையும் பயன்படுத்தினால் மட்டுமே விரைவாக அலுவலகம் சென்றடையும் நிலை உள்ளது. 

அப்படி 3 வகை போக்குவரத்தையும் பயன்படுத்தும் ஒருவர், போக்குவரத்து சேவைக்கு தனித்தனியே பயணச்சீட்டு வாங்குவதனால், மாநகரப் போக்குவரத்தின் கீழ் இயங்கும் பேருந்து, சென்னை மெட்ரோ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மெட்ரோ ரயில்கள் மற்றும் தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் புறநகர் ரயில்களை இணைத்து ஒரே பயணச்சீட்டில் பயணம் செய்வதற்கான பயணிகளின் தரப்பில் கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட மூன்றிலும், ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் செயலியை உருவாக்க மூவிங் டெக் இன்னொவேஷன்ஸ் நிறுவனத்திற்கு பணி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது முதற்கட்டமாக டிசம்பர் மாதம் முதல் மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் வகையில் ஒரே டிக்கெட் முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்தாண்டு, மார்ச் மாதம் முதல் புறநகர் ரயில்களிலும் பயணம் செய்யும் வகையில் இந்தத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நபர், 3 போக்குவரத்துச் சேவையையும் பயன்படுத்த வேண்டும் என்றால், தனித்தனியே பயணச் சீட்டு வாங்கும் சிரமம் குறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples travel bus electric train and metro at one ticket in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->