மருத்துவர் மீது கத்திக்குத்து - கிண்டி மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பணியாற்றி வரும் மருத்துவர் பாலாஜி ஜெகந்நாதன் என்பவரை விக்னேஷ் என்ற இளைஞர் நேற்று மருத்துவமனையிலேயே கத்தியால் குத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த மருத்துவர், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் வாலிபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மருத்துவமனையில் அரசு மருத்துவர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மருத்துவமனையில், உரிய பரிசோதனைக்கு பிறகே மருத்துவமனை ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுசிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு மட்டுமே இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police security in gundy government hospital for doctor attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->