நிலக்கரி தட்டுப்பாடு.. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளது. இவற்றின் மூலம் தினமும் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மின் தேவை அதிகரித்துள்ளது. 

இதனால் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களில் முழு உற்பத்தித் திறனுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தினசரி நிலக்கரி தேவை 9 ஆயிரம் டன் ஆகும். நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக அங்கு மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4ஆம் தேதி நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மூன்று மற்றும் நான்காவது அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், தற்போது தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நான்கு அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 840 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

power outage at 4 units at thoothukudi power station


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->