தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணி பெண்.. காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


கர்ப்பிணி பெண் இறப்பில் மர்மம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கள்ளகுறிச்சி மாவட்டம், விளம்பார் கிராமத்தைச் சேர்ந்தரங்கன் மகன் ஈஸ்வரமூர்த்தி. இவருக்கும் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தமுருகேசன் மகள் நித்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.  இந்நிலையில், இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு அடிக்கடி வாந்தி மயக்கம் ஏற்படும் என கூறப்படுகிறது.

இதற்கிடையில் வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.அவரை மீட்ட அக்கம்பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவரகள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நித்யாவின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த அவரின் தாய் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு  செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆகி 4 மாதமே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம்  அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnant lady Death Near Kallakurichi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->