சட்டப்பேரவை கலைக்கப்படும் சூழல்.. அரசுக்கு எதிராக 40 எம்எல்ஏக்கள்..! ஆளும் கட்சியின் முக்கிய புள்ளி பரபரப்பு ட்வீட்.!!
sanjay raut tweet for maharashtra political
மகாராஷ்டிரா அரசியலில் தற்போது குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு சிவசேனா கட்சியை சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் ஆளும் கூட்டணிக்கு எதிராக திரும்பி உள்ளதால், ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக அதிருப்தியில் இருக்கும் மகாராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் அசாமில் தங்கி உள்ளார்.
மகாராஷ்டிராவில் நடந்த மேலவை தேர்தலில் பாஜகவின் 5 எம்எல்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றது பெரும் சர்ச்சையானது. சில சிவசேனா எம்எல்ஏக்களின் ஆதரவு இன்றி பாஜக ஐந்து எம்எல்சி இடங்களை பிடித்து இருக்க முடியாது. அப்போதே சிவசேனாவில் பாஜகவிற்கு ஆதரவாக கருப்பு ஆடுகள் உள்ளது என புகார்கள் எழுந்தது.
இதனிடையே. திடீரென கட்சி கொறடாவாவும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே அங்கு அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள. சுமார் 22 எம்எல்ஏக்களுடன் இவர் குஜராத்தில் சென்று அங்கு ரிசார்ட் ஒன்றில் தங்கியிருந்தார். இதனிடையே நேற்று மாலை அவருக்கு ஆதரவு 33 எம்எல்ஏக்கள் ஆக உயர்ந்தது. தற்போது சுயேச்சை எம்எல்ஏக்களை சேர்த்து தன் பக்கம் 40 எம்எல்ஏக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். நேற்றிரவு ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சிவசேனா எம்எல்ஏக்கள் குஜராத்திலிருந்து அசாம் சென்றனர். இதனால் மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவை கலைக்கப்படும் சூழல் நிலவி வருவதாக சிவசேனாவின் சஞ்சய் ராவத் ட்வீட் செய்துள்ளார். உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளதால் சட்டப்பேரவை கலைக்கப்படும் சூழ்நிலை நிலவுகிறது என தெரிவித்துள்ளார்.
English Summary
sanjay raut tweet for maharashtra political