தொடர் கனமழை! காற்றாற்று வெள்ளம்! குற்றால அருவியில் குளிக்க தடை! - Seithipunal
Seithipunal


மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவியில்  நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை வரை பெரிது வருகிறது.

கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று மாலையிலிருந்து நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது.

தற்போது நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்காக மாறி உள்ளது. குற்றாலத்தில் உள்ள 5 அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காற்றாற்று வெள்ளம் போல் தண்ணீர் கொட்டுகிறது. தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்க  நெறியிட்டால் அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு தடை விதித்தது.  தண்ணீர் வரத்து குறையத்ததால் இன்றும் குற்றாலத்தில் உள்ள 5 அருவிகளிலும் சுற்றலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் குற்றாலம் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலரும் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஆங்காங்கே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. அருவிகளுக்கு வரும் தண்ணீரின் அளவு  சீராகும் பட்சத்தில் விரைவில் சுற்றுலா பயணிகள் உடனடியாக குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

second day tourists have been banned from bathing in Kutralam Falls


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->