#திருப்பத்தூர் || நீட் தேர்வு முடிவுக்கு பயந்து மாணவர் தற்கொலை..! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் நீட் தேர்வு முடிவுக்கு பயந்து மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜங்களாபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பரமேஸ்வரன் (17), கடந்த ஏழாம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு எழுதினார். ஆனால் பரமேஸ்வரன் நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என்பதால் கடந்த நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு பரமேஸ்வரன் நீட் தேர்வு முடிவுக்கு பயந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பரமேஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே பரமேஸ்வரன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த பரமேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student commits suicide by hanging himself in Tirupattur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->