3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் பல்வேறு ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து வருகிறது. சமீபத்தில் வேலூர், திருவண்ணாமலை திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களை பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்  கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வின் முடிவில் பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். 

சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். இந்த நிலையில் இன்று சேலம் மாநகர் ஆணையர் உட்பட மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாநகர் காவல் ஆணையராக பணிபுரிந்து வந்த அஜ்மல் ஹோடா ஆவடி போக்குவரத்து காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று சென்னை ரயில்வே காவல் ஐஜியாக பணிபுரிந்து வந்த விஜயகுமார் ஆவடி சரக டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி போக்குவரத்து கூடுதல் ஆணையாக பணிபுரிந்து வந்த விஜயகுமாரி சேலம் மாநகர் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேற்கண்ட 3 ஐபிஎஸ் அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பனிந்திரா ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Govt transferred 3 IPS officers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->