இருங்க பாய்..கம்பி எண்ணுவீங்க பாருங்க ..மொமெண்ட்!உதயநிதி ஸ்டாலின் மீது மேலும் ஒரு வழக்கு! - Seithipunal
Seithipunal


சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அணிவகுக்கும் உடை தொடர்பான விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர் பி. பிரவீன் சமாதானம், துணை முதல்வர் அரசுப் பொதுநிகழ்வுகளில் திமுக கட்சியின் கொடி, சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிவது அரசியல் சாசன விதிகளை மீறுவதாகக் கூறி, இதற்கு தடை விதிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், துணை முதல்வர் கட்சி சின்னத்துடன் கூடிய உடைகளை அணிந்தால் அது அரசு நிகழ்வுகளுக்கு அரசியல் நிறத்தை ஏற்படுத்தும் என்றும், அரசு ஊழியர்கள் பின்பற்றும் ஆடை கட்டுப்பாடு விதிகளை துணை முதல்வரும் பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார். இதுவே இல்லாமல், பொதுநலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வுகளில் திமுக சார்பில் வழங்குவது போன்ற எண்ணத்தை இது உருவாக்கக்கூடும் என்பதால், அரசியல் பாகுபாடின்றி நடுநிலையான போக்குடன் செயல்பட வேண்டிய அவருக்கு ஒரு உடை கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு முன்பே, சேலையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்யகுமார், கலாச்சார ரீதியிலான உடைகளை அணிய வேண்டும் என்பதற்கான வழக்கை தொடர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த மனுக்கள் மேலாக தமிழக அரசுக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான ஆடை கட்டுப்பாட்டை வகுப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்பதையும் பி. பிரவீன் கோரியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Another case against Udayanidhi Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->