தமிழ் புத்தாண்டு விடுமுறை.. இன்று சிறப்பு ரயில் சேவை இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் முக்கிய விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்லும் பொது மக்களின் நலன் கருதி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு கண்ணூர் சென்றடைகிறது.

அதனைத் தொடர்ந்து மறு மார்க்கமாக கண்ணூரில் இருந்து நாளை ஏப்ரல் காலை 8.35 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10:35 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்துடைகிறது.

மேலும், இந்த சிறப்பு ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் வழியாக செல்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil new year holiday special train service today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->