மதுரை மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம்.. திருவாரூர் மத்திய பல்கலை கழக நுழைவுத்தேர்வின் அவலம்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும்  மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் 43 மத்திய பல்கலைக்கழங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் இந்த மனிதவள மேம்பாட்டு துறையின் மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகின்றது.

இந்த மத்திய பல்கலைக்கழகத்தில் சேர நினைக்கின்ற மாணவர்கள் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பல்கலைக்கழகத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். இதன்படி 2022- 2023 ஆம் ஆண்டின் நுழைவுத்தேர்விற்காக விண்ணப்பித்த மதுரை மாணவருக்கு நுழைவு தேர்வுக்கான தேர்வு மையம் லட்சத்தீவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து, மதுரை எம்.பி சு.வெங்கடேசன், " மதுரை மாணவர்
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர லட்சத்தீவில் தேர்வு மையம். நுழைவுத் தேர்வெழுத அலைகடல் தாண்டி பயணப்பட வேண்டுமா?

தேர்ச்சி பெறுவதை விடக் கடினம் தேர்வு மையத்தை சென்று சேர்வது என்ற நிலையை உருவாக்காதீர்கள். தேர்வு மையத்தை மாற்றுங்கள் "என்று தெரிவித்துள்ளார். எம்.பியின் கருத்தை தொடர்ந்து இது தற்போது சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur central University Entrance exam centre in anthaman


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->