புயல் எதிரொலி: சென்னை மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்! வைரல் வீடியோ!
Cyclone Chennai marina beach
சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 550 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 13 கி.மீ./மணி வேகத்தில் நகர்ந்து வருகிறது.
நாகையில் இருந்து 370 கி.மீ. மற்றும் புதுச்சேரியில் இருந்து 470 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று மாலை 5:30 மணிக்குள் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையை முன்னிட்டு, மீனவர்கள் கடலுக்கு செல்லத் தவிர்க்குமாறு எச்சரிக்கப்படுள்ளனர். மேலும், மழை மற்றும் சூறாவளி பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து பின்பற்ற வேண்டும் என்று அரசு தரப்பிலும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுக்கியுள்ளது. இதனை அப்பகுதியில் உள்ள மக்கள் பார்த்துவிட்டு செல்கின்றனர்.
முதல்கட்ட தகவலின்படி மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கிய அந்த மர்ம பொருள் "கடல் ஆராய்ச்சி சேமிப்பு மிதவை" என்பது தெரியவந்துள்ளது.
English Summary
Cyclone Chennai marina beach