கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு - ஒரே நேரத்தில் மூன்று ஆட்டோ ஓட்டுனர்கள் தற்கொலை முயற்சி.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவர் கடந்த பத்து ஆண்டுகளாக துடியலூர் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். 

இந்த நிலையில், ஆனந்தகுமார் திமுக ஆதரவாளர் என்பதால் அவரையும் அவருடன் இருந்த மூன்று பேரையும் பாஜகவினர் இருக்கும் அந்த ஆட்டோ ஸ்டேன்டில் அனுமதிக்காமலும், ஆட்டோ ஓட்ட விடாமலும் ரகளை செய்துள்ளனர். இதனால், அவர்கள் மூன்று பேரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மனு அளித்துள்ளனர்.

அதன் படி, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இருப்பினும் அங்குள்ள பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ச்சியாக தொல்லை அளித்து வந்துள்ளனர். 

இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான ஆனந்தகுமார் உள்ளிட்ட நான்கு பேர் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்று தங்களது குடும்பத்துடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.

அப்போது திடீரென அவர்கள் ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை எடுத்து தங்களது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதைப்பார்த்த போலீசார் நான்கு பேர் மீதும் தண்ணீரை ஊற்றி மீட்டனர். அதன் பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி ஒரு இடத்தில் அமர வைத்தனர்.

அதன் பின்னர் அவர்களிடம் விசாரணை செய்ததில், நாங்கள் துடியலூர் ஆட்டோ ஸ்டேன்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வந்த நிலையில் தற்போது எங்களை பாஜகவில் சேர சொல்லி நிர்பந்தம் செய்வதாகவும், மதம் மற்றும் வகுப்பு பாகுபாடு பார்த்து ஆட்டோ ஓட்ட விடாமல் மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும், எங்களால் சரியாக ஆட்டோ ஓட்ட முடியாததால் வாடகை, குழந்தைகளின் கல்வி கட்டணம் உள்ளிட்ட கட்டணத்தை செலுத்த முடியாதல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிதுள்ளனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதான படுத்தியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three auto drivers sucide attempt in covai collector office


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->