புதுச்சேரி - தமிழக எல்லையில் 3 கோடி பணம் பறிமுதல்.!
three crores money seized in puthuchery tamilnadu border
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் போலீசார் தேர்தல் பறக்கும் படையினருடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரி-தமிழக எல்லை பகுதிகளில் காவல் துறையினர் உதவியுடன் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் தேர்தல் துறை பறக்கும் படையினரும் காவல் துறையினரும் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக ஏ.டி.எம்.மிற்கு பணம் நிரப்பும் தனியார் வாகனம் ஒன்று வந்தது. அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதில், கோடி கணக்கில் கட்டுக்கட்டாக ரூ. 500 புதிய நோட்டுகளும் பழைய நோட்டுகளும் இருந்தன. ஆனால், அதற்கான எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை. இருப்பினும், அவர்கள் வைத்திருந்த ரசீதில் ஜனவரி 21-ந் தேதி பணம் எடுத்ததற்கான ஆதாரம் இருந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் வாகனத்தையும், அதில் இருந்த 2 நபர்களையும் புதுச்சேரி கணக்கு மற்றும் கருவுலாக அலுவலகத்திற்கு கொண்டுச் சென்றனர். அங்கு பணத்தை எண்ணி பார்த்ததில் ரூ 3 கோடியே 47 லட்சம் இருப்பது தெரிய வந்தது. மேலும் ரூ 98 லட்சத்தை ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்பியதாகவும் ரூ.1 கோடி வங்கி அலுவலகத்தில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஒட்டு மொத்தமாக ரூ.5 கோடிக்கு மேல் பண பரிமாற்றம் செய்ய இருந்த நிலையில் ஆவணங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கணக்கு கருவூலகத்தில் வைக்கப்பட்டது.
English Summary
three crores money seized in puthuchery tamilnadu border