திருப்பூர்.! மேம்பால தடுப்பில் கார் மோதிய விபத்தில் 3 மாத குழந்தை உட்பட 3 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் மேம்பால தடுப்பில் கார் மோதிய விபத்தில் 3 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

திண்டுக்கல்லில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் மணிகண்டன்(வயது35). இவர் திருச்சியை அடுத்த பெரம்பலூரை சேர்ந்தவர்.

இவர் கோவையில் உள்ள உறவினரின் திருமணத்திற்காக மனைவி மற்றும் மூன்று மாத கைக்குழந்தையுடன் காரில் சென்றுள்ளார்.

இதையடுத்து திருமணம் முடிந்தபின் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது தாராபுரத்தை அடுத்த சாலக்கடை மேம்பாலத்தில் இருந்த தடுப்பில் கார் பலமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மணிகண்டனின் மனைவியும் மற்றும் அவரது மூன்று மாத கைக்குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து பலத்த காயம் அடைந்த மணிகண்டனை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு தாராபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்பு மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக மூலனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Three people including a three month baby were killed in a car crash in Tiruppur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->