#TNBUDGET2023 : பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்.. அதிமுக எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டபேரவையில் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து சில நாட்கள் சட்டப்பேரவை நடைபெற்ற நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 10 மணி முதல் தாக்கல் செய்து வருகிறார். இதனை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.

அப்போது பட்ஜெட் உரைக்கு முன்னர் தங்களை பேச அனுமதிக்க வேண்டுமென அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து பட்ஜெட் உரையை வாசித்துக் கொண்டிருந்தார்.

இதனிடையே சபாநாயகர் அப்பாவு பட்ஜெட் உரை வாசித்த பின்னர் அதில் நிறை, குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம். இப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனாலும் அதிமுகவினர் தொடர்ந்து அமலியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அமலியில் ஈடுபட்ட அதிமுகவினர் சட்டப்பேரவிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Budget session starts ADMK MLAs walk out


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->