வயநாடு சம்பவம் எதிரொலி : தமிழகத்தைச் சேர்ந்த மலை மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவு..!!
TN Government Orders To Monitor Hill Districts in Tamilnadu in Order to Wayanad Disaster
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 340ஐ தாண்டி உள்ளது. இதையடுத்து தமிழக மலைப் பகுதிகளை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் மண்ணில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இன்று நான்காம் நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள மலைப் பகுதி மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்குமாறு தமிழக அரசு வருவாய்த்துறை மற்றும் மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழக அரசு அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, குமரி, நெல்லை, விருதுநகர், திருப்பூர் ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மாவட்டங்களை மழை நாட்களில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், ஏதேனும் மாறுதல் தெரிந்தால் உடனடியாக அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
மேலும் இது தொடர்பான அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் ஏற்கனவே நடத்தி முடிக்கப் பட்டுள்ளதாகவும், இந்த மலை மாவட்டங்களை அதிகாரிகள் தரப்பு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
English Summary
TN Government Orders To Monitor Hill Districts in Tamilnadu in Order to Wayanad Disaster