தமிழக அரசு அதிரடி... மாநிலம் முழுவதும் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் பணியாற்றி வரும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் என 30 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நெல்லை மாவட்ட ஆட்சியராக கார்த்திகேயன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக தீபக் ஜேக்கப், தென்காசி மாவட்ட ஆட்சியராக ரவிச்சந்திரன், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஜெயசீலன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பழனி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக ஸ்ரீதர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த மோகன் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சென்னை மாநகராட்சி இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாக இருந்த ஜெயச்சந்திரன் பானு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக செயல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலைத்துறை ஆணையராக இருந்த குமரகுருபரன் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அதேபோன்று தேனி மாவட்ட ஆட்சியராக ஷாஜிவானா, கோவை மாவட்ட ஆட்சியராக கிராந்தி குமார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக சாரு ஸ்ரீ, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக கற்பகம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக மகாபாரதி ஆகியோர் என தமிழக முழுவதும் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt transferred 30 IAS officers across Tamil Nadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->