அதே பாணியில்.. "போலீஸ் வேனில்" பெலிக்ஸ் ஜெரால்ட்.. உசுரு முக்கியம் பிகிலே.!! - Seithipunal
Seithipunal


பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் தற்போது கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது ஏற்கனவே ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து சென்னை மாநகர் காவல் ஆணையரின் உத்தரவின் பெயரில் சவுக்கு சங்கர் தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் யூடியூப் சேனலில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து ஒளிபரப்பியதாக டெல்லியில் கைதான யூடியூப் பெலிக்ஸ் ஜெரால்ட் ரயில் மூலம் திருச்சி மாநகர் போலீசார் அழைத்து  திருச்சி மாநகர் போலீசார் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். 

அவரை சென்னையில் இருந்து வேன் மூலம் திருச்சிக்கு போலீஸ் வேன் மூலம் அழைத்துச் செல்கின்றனர். திருச்சி அழைத்துச் செல்லப்படும் பெலிக்ஸ் ஜெராலிடம் விசாரணை நடத்தி திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் திருச்சி மாநகர் போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் போலீஸ் வாகனம் மூலம் கோவைக்கு அழைத்துச் சென்றபோது தாராபுரம் அருகே நெடுஞ்சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சவுக்கு சங்கருக்கு உயிர் பயம் காட்டவே போலீசார் இவ்வாறு செய்ததாக சமூக வலைதளங்களில் பலர் குற்றம் சாட்டு இருந்தனர். 

இந்த நிலையில் அதேபோன்று தற்போது ஃபெலிக்ஸ் ஜெரால்ட் சென்னையிலிருந்து திருச்சிக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TnPolice take Felix Gerald who was arrested in Delhi to Trichy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->