மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!
Tourists allowed to bathe in Manimuthar waterFalls
மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த தடையை வனத்துறை நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவிக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். கோடை விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் குளித்து மகிழ்வது வழக்கம்.
இந்தநிலையில், நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கன மழை பெய்து வந்தது. அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பலத்த மழை பெய்து வருவதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த 6 நாட்களுக்கு முன்பு திடீரென என வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதனையடுத்து மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனதுறையினர் தடை விதித்தது. இந்தநிலையில், அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Tourists allowed to bathe in Manimuthar waterFalls