இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விவசாயி பலி - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மேமாளூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி உத்திரியநாதன் (40). இவர் எலவானசூர்கோட்டை பகுதியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

அப்பொழுது பல்லவாடி பேருந்து நிலையம் அருகே வந்த போது எதிரே செங்கனாங்கொல்லை பகுதியை சேர்ந்த ஆதிசங்கர்(34) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது உத்திரநாதன் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த உத்திரியநாதனை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் உத்திரநாதன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

மேலும் படுகாயமடைந்த ஆதிசங்கர் சிகிச்சைக்காக முண்டையம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ரிஷிவந்தியம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twowheelers accident in kallakurichi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->